< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்; 6 கிலோ தங்கம் பறிமுதல்
|4 Jan 2025 8:27 AM IST
தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, விமான நிலைய ஊழியர்களிடமும் சோதனை நடைபெற்றது. அப்போது, விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேர் தங்கத்தை கடத்தி வர முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 4.84 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.