< Back
தேசிய செய்திகள்
விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிக்கிறது - கனிமொழி எம்.பி பேட்டி
தேசிய செய்திகள்

விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிக்கிறது - கனிமொழி எம்.பி பேட்டி

தினத்தந்தி
|
28 Nov 2024 8:33 PM IST

விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தி.மு.க எம்.பி., கனிமொழி, இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து கனிமொழி கூறியதாவது;

"தி.மு.க விஸ்வகர்மா திட்டத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க தீவிரமாக எதிர்ப்பதன் காரணத்தை ஏற்கனவே மிகத் தெளிவாக கூறியுள்ளார். எனது நிலைப்பாடும் அதுதான். சாதி அமைப்பையும், பெற்றோர்களின் தொழிலையே குழந்தைகள் ஏற்க வேண்டும் எனும் குலத்தொழில்முறையையும் அத்திட்டம் இங்கு மீண்டும் கொண்டுவருகிறது. அதை நாங்கள் ஏற்கமுடியாது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்