< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தீபாவளி என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து
|31 Oct 2024 2:28 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அறியாமைக்கு எதிராக அறிவும், தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விழாவாகும்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் இந்த பண்டிகையை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகின்றன. இந்த பண்டிகை பிரகாசமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் தூண்டுகிறது. மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்.' என குறிப்பிட்டுள்ளார்.