< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அல்லு அர்ஜுன் கைது விவகாரம்: தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேட்டி
|14 Dec 2024 5:02 AM IST
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை என்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
நகரி,
நடிகர் அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் அரசியல் இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தநிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்தபோது, இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
சந்தியா தியேட்டர் சம்பவத்தில் ஒரு பெண் இறந்து விட்டார். அவரது மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான். உயிர் போனாலும் வழக்கு பதிவு செய்யக்கூடாதா. நடிகர் சினிமாவில் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். அவ்வளவுதான். அவர் என்ன இந்திய எல்லையில் பாகிஸ்தானை எதிர்த்து போராடியவரா. சட்டம் தன் கடமையை செய்துள்ளது. இதில் நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என்ற வேறுபாடு கிடையாது. அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை. சட்டப்படி நடந்துள்ளது. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.