மராட்டிய சட்டமன்ற தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
|99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மராட்டியத்தில் ஆளும் சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே தரப்பு), பா.ஜனதா ,தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார் தரப்பு) ஒரு கூட்டணியாக களம் காண்கிறது.
சிவசேனா(உத்தவ்), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) ஒரு அணியாகவும் போட்டியிடுகிறது. இரு அணிகளும் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், பாஜனதா, 99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அந்த பட்டியலில், தேவேந்திர பட்னவிஸ், சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலே உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், தேவேந்திர பட்னவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும், காம்தி தொகுதியில் சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலேவும் போட்டியிடுகின்றனர். ஷஹாடே தொகுதியில் ராஜேஷ் உடேன்சிங் பட்வி, துலே நகரில் அனுப் அகர்வால் ஆகியோரும் களம் காண்கின்றனர்.
கட்கோபார் மேற்கு தொகுதியில் ராம்கடம், சிக்லி தொகுதியில் ஸ்வேதா மகாலே பாட்டீல், ஸ்ரீஜெயா அசோக் சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நிதிஷ் ராணே கன்காவ்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்