< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எருமேலியில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடுவதாக தேவஸ்தானம் அறிவிப்பு
|10 Oct 2024 3:08 AM IST
எருமேலியில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், எருமேலியில் விபூதி, குங்குமம் வைக்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, பேட்டை துள்ளலுக்கு பின் இலவசமாக பக்தர்கள் சந்தனம், குங்குமம் இடலாம் என தேவஸ்தானம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்து, குத்தகைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.