< Back
தேசிய செய்திகள்
அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு
தேசிய செய்திகள்

அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு

தினத்தந்தி
|
6 Jan 2025 1:58 AM IST

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அடர் பனி காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

அடர் பனி மூட்டம் போர்வை போல இருந்ததால் டெல்லி விமான நிலையத்தில் பார்க்கும் திறன் மிகவும் குறைவாக இருந்ததாகவும், இதனால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்