குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு
|குடும்பத்தகராறில் தனது கணவரின் அந்தரங்க உறுப்புகளை வெட்டியதாக பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி,
வடக்கு டெல்லியின் ரூப் நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கிடையே நேற்று திடீரென்று குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த கணவர், அங்குள்ள சப்தர் ஜங் ம்ருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், படுகாயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை. அவர் பேசும் நிலை வந்ததும் எதனால் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரம் தெரியவரும். மேலும் அவரது மனைவி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.