< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
|28 May 2024 8:14 AM IST
டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வாரணாசி,
டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட தயராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி, விமானம் கிளம்புவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வந்தன.
அப்போது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக பயணிகள் அவசரகால கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ரன்வேயில் இருந்து தனி இடத்திற்கு விமானம் இழுத்து செல்லப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விமானத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.