< Back
தேசிய செய்திகள்
டெல்லி:  ராணி கார்டனில் உள்ள குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து
தேசிய செய்திகள்

டெல்லி: ராணி கார்டனில் உள்ள குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

தினத்தந்தி
|
6 Dec 2024 5:01 AM IST

டெல்லியின் ராணி கார்டனில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

புது டெல்லி,

டெல்லியின் ராணி கார்டனில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து அங்கிருந்து வெளியேறினர். இந்த நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஏறக்குறைய 12 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அவர்கள் பலத்த போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சுமார் 400-க்கும் மேலான குடிசைகள் எரிந்து நாசமாயின.

இது குறித்து தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அத்வால் கூறுகையில்;

குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எங்களுக்கு அதிகாலை 2.25 மணிக்கு அழைப்பு வந்தது. தற்போது 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. விசாரணைக்குப் பிறகு நாங்கள் அதை உறுதிப்படுத்த முடியும். தீ அணைக்கப்பட்டதும், மக்கள் சில சிறிய குடோன்களை உருவாக்கியுள்ளனர், மேலும் இந்த தீ விபத்தில் 4-5 ஆடுகள் தீயில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்