< Back
தேசிய செய்திகள்
சிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை - கோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை - கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
7 Nov 2024 6:25 AM IST

சிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்று, கற்பழித்தான். இதனையடுத்து சிறுமியை கடத்தி கற்பழித்ததாக சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டு டெல்லி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அண்மையில் முடிவுக்கு வந்தது. இதில் சிறுவன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. சிறுவனை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, போக்சோ சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் அவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், கடத்தல் குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்