
டெல்லி: ரூ.1.5 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்; 2 பேர் கைது

டெல்லியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கொக்கைன் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி பகுதி முழுவதும் தீவிரமாக கொக்கைன் விநியோகம் செய்து வந்த இருவர் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பிகாஜி காமா பகுதி அருகே ரிங் ரோட்டில் உள்ள ஒரு பஸ் நிறுத்தம் அருகே கொக்கைன் கடத்திய ஆப்பிரிக்க நாட்டவரான யாவோ(40) மற்றும் பீகாரை சேர்ந்த பிகாஸ்(23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 141.9 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் கூற்றுப்படி, யாவோ 2018 இல் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார், விசா காலாவதியான பிறகு சட்டவிரோதமாக தங்கியிருந்தார். ஆரம்பத்தில் தனது செலவுகளை ஈடுகட்ட சிறிய அளவிலான கொக்கைன் விற்றார், ஆனால் விரைவில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தொடங்கினார்.
யாவோ முன்பு குருகிராமில் கைது செய்யப்பட்டு போண்ட்சி சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிகாஸை சந்தித்தார். அவர்கள் விடுதலையான பிறகு, இருவரும் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஒன்றிணைந்தனர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.