< Back
தேசிய செய்திகள்
டெல்லி: அரசு பஸ்சில் பட்டாசு வெடித்து 2 பயணிகள் காயம்
தேசிய செய்திகள்

டெல்லி: அரசு பஸ்சில் பட்டாசு வெடித்து 2 பயணிகள் காயம்

தினத்தந்தி
|
31 Oct 2024 9:32 PM IST

டெல்லியில் பஸ்சில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்த பயணிகள் 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் துவாரகா மாவட்டத்தில் அரசு பஸ் ஒன்றில் இன்று மாலை பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், பஸ்சில் பயணி ஒருவர் கொண்டு வந்த பட்டாசு வெடித்து உள்ளது. இதில், அந்த நபரும், அவருக்கு பின்னால் பஸ்சில் அமர்ந்திருந்த நபரும் காயமடைந்தனர்.

இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்போது, சாவ்லா காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. பஸ்சில் தீப்பிடித்தது பற்றி கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று 2 பேரையும் மீட்டனர். காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

பஸ்சில் சிறிய அளவிலான பட்டாசுகளே கொண்டு செல்லப்பட்டன. அந்த பட்டாசு வெடித்துள்ளது. அதனால் பஸ்சில் தீப்பிடித்து உள்ளது. இதில் பயணிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு எதுவும் ஏற்பட்ட தகவல் வரவில்லை என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்