உத்தரகாண்ட்: கார்-சரக்கு லாரி மோதி விபத்து- 6 பேர் பலி
|உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஓ.என்.ஜி.சி. சந்திப்பு அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் கார் மீது சரக்கு லாரி பலமாக மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக டேராடூன் காவல் துறை கண்காணிப்பாளர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து டேராடூன் காவல் துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களாக குணீத் (19), குணால் (23), நவ்யா கோயல் (23), அதுல் அகர்வால் (24), காமக்ஷா (20), ரிஷவ் ஜெயின் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சித்தேஷ் அகர்வால் (25) என்பவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.