பிரேத அறையில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி; வீடியோ எடுத்த ஊழியர்கள்
|உத்தர பிரதேசத்தில் ஜோடி ஒன்று பிரேத அறையில் பாலியல் உறவில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நொய்டா,
உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டார் 94 பகுதியில் பிரேத அறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பல உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், பிரேத அறையின் அருகே ஜோடி ஒன்று பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி இடம் பெற்று உள்ளது.
அந்த அறையில் உடல் ஒன்று வைக்கப்பட்ட நிலையில், அதன் அருகே இந்த ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டு உள்ளது. இந்த வீடியோ வைரலானது. இதனை கண்ட சுகாதார துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அந்த அறையை சுற்றி சி.சி.டி.வி. கேமிராக்களை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வெளிப்புற சுவர்கள், குளிர்பதன அறை உள்ளிட்ட பிற பகுதிகள் என 12 இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை கட்டுப்பாட்டு அறை ஒன்றின் வழியே கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய கமிட்டி ஒன்றும் அமைக்கப்படும் என டாக்டர் ஜெய்ஸ் லால் கூறியுள்ளார்.
துப்புரவு தொழிலாளியான ஷேர் சிங், வீடியோவை படம் பிடித்த தூய்மை பணியாளரான பர்வேந்திரா ஆகியோருடன் பாதுகாவலர் பானு என அந்த வீடியோவில் 3 பேர் காணப்படுகின்றனர்.
அவர்கள் மூன்று பேரும் புதிய குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். முழு விசாரணைக்கு பின் இந்த 3 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என லால் கூறியுள்ளார். வேறு ஏதேனும் வீடியோ அவர்களிடம் இருக்கின்றனவா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரேத அறைக்கு அத்துமீறி ஒருவர் செல்ல முடியுமென்றால், அதனால் அதில் வைக்கப்பட்டு இருக்கும் உடல்கள் பாதிக்கப்பட கூடிய சூழலும் உள்ளது.
சில வழக்குகளில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய நிலை காணப்படுகிறது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.