நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்கு
|மாதவி புச் முறைகேடு தொடக்கத்தில் கற்பனை செய்ததை விட மிகவும் ஆழமாக செல்கிறது என ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி,
ராகுல் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுடன் விவாதிக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார் அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-
மாதவி புச் முறைகேடு தொடக்கத்தில் கற்பனை செய்ததை விட மிகவும் ஆழமாக செல்கிறது. சாமானிய இந்தியர்களையும் அவர்களின் முதலீடுகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளைத் துறந்து, பெரிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இந்த மோசடிகளை விசாரித்து, பொதுமக்களுக்கு உண்மையை அம்பலப்படுத்துகிறது.
தொழிலதிபர் அதானிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே தொடர்பு உள்ளதாக 2023 மார்ச் மாதம் மக்களவையில் பேசியபோது இடைநீக்கம் செய்யப்பட்டேன்.தற்போதைய அரசு ஏகபோகத்தை ஆதரிப்பது மட்டுமின்றி, நாட்டின் செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் குவிப்பதில் தீவிரமாக கவனம் செலுத்துகிறது" இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.