< Back
தேசிய செய்திகள்
ஏழ்மையான சமூகத்தினரை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவி அரசியலமைப்பு : ராகுல் காந்தி

File image

தேசிய செய்திகள்

ஏழ்மையான சமூகத்தினரை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவி அரசியலமைப்பு : ராகுல் காந்தி

தினத்தந்தி
|
26 Nov 2024 4:17 PM IST

அரசியலமைப்பு எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக நம் நாடு இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு நாளையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

உங்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகள். நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும். ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்க அரசியலமைப்பு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அது எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக நம் நாடு இருக்கும்.

இந்த நாளில், அரசியலமைப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், போராளிகள், மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அரசியலைப்பை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை மீண்டும் ஏற்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்