< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் ரெயிலை கவிழ்க்க சதி
|18 Nov 2024 5:03 AM IST
தண்டவாளத்தில் சிமெண்டு பலகை மற்றும் இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள திப்னாபூர் ரெயில் நிலையத்துக்கு அருகே நேற்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள தண்டவாளத்தில் சிமெண்டு பலகை மற்றும் இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரெயில் டிரைவர் அவசரகால 'பிரேக்' மூலம் ரெயிலை உடனடியாக நிறுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுப்பற்றி தகவல் அறித்து வந்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிமெண்டு பலகை மற்றும் இரும்பு கம்பியை அகற்றினர். அதன்பிறகு சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரெயிலை கவிழ்க்க சதி செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.