< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - தேர்தல் பின்னடைவுகள் குறித்து ஆலோசனை
தேசிய செய்திகள்

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - தேர்தல் பின்னடைவுகள் குறித்து ஆலோசனை

தினத்தந்தி
|
29 Nov 2024 5:26 PM IST

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சமீபத்திய தேர்தல் பின்னடைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்புவது தொடர்பாக இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அரியானா தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும், பீகார் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்