< Back
தேசிய செய்திகள்
சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் -  சித்தராமையா
தேசிய செய்திகள்

சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - சித்தராமையா

தினத்தந்தி
|
15 Nov 2024 12:07 AM IST

காங்கிரஸ் கட்சியை சமதர்ம கட்சியாக நேரு உருவாக்கினார் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு விதான சவுதாவில் உள்ள முன்னாள் பிரதமர் நேருவின் சிலைக்கு முதல்-மந்திரி சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடுகிறோம். குழந்தைகள் மீது அவர் மிகுந்த அன்பு காட்டினார். நாட்டின் பிரதமராக 17 ஆண்டுகள் பணியாற்றினார். சமதர்மவாதியாக இருந்த அவர், காங்கிரஸ் கட்சியை சமதர்ம கட்சியாக உருவாக்கினார். அவர் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்.

சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். ஆபரேஷன் தாமரை பற்றி ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தட்டும் என்று விஜயேந்திரா கூறியுள்ளார். அவர் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரது கருத்துக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்