< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
21 Feb 2025 12:00 AM IST

உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு ,தற்போது டாக்டர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வீட்டுக்கு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்