< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை
|24 Oct 2024 6:13 PM IST
இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. மில்கிபூர் சட்டசபை தேர்தலுக்கு தொடர்புடைய வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியினர் வேறு எந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிடவும் மாட்டார்கள். இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொள்ளும். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை எந்தவித நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.