< Back
தேசிய செய்திகள்
நலிவடைந்த மக்களின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கூட்டணி முயற்சிக்கிறது - அமித்ஷா
தேசிய செய்திகள்

'நலிவடைந்த மக்களின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கூட்டணி முயற்சிக்கிறது' - அமித்ஷா

தினத்தந்தி
|
16 Nov 2024 10:10 PM IST

நலிவடைந்த மக்களின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கூட்டணி முயற்சிக்கிறது என அமித்ஷா விமர்சித்துள்ளார்.

மும்பை,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளில், முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு வரும் 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஜார்க்கண்டில் நடைபெறும் தேர்தல், மாநிலத்தில் உள்ள பெண்கள், இளைஞர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல் ஆகும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நலிவடைந்த மக்களின் இடஒதுக்கிட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை எட்டிவிட்டது. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.யின் இடஒதுக்கீட்டில் இருந்துதான் வழங்க வேண்டும். இதில் யாருடைய இடஒதுக்கீட்டை ராகுல் காந்தி பறிக்கப் போகிறார்? பா.ஜ.க.விடம் ஒரே ஒரு எம்.பி. இருக்கும் நிலை வந்தால் கூட, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்