< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சித்தர்களின் பூமியான தமிழகத்தில் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துகள் - பவன் கல்யாண்
|28 Oct 2024 3:49 PM IST
விஜய்யின் அரசியல் பயணத்துக்கு ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய், "பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்" என்று கூறினார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், நடிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழகத்தில் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.