ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
|ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு வரும் நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு பெற்றுவிட்ட நிலையில், இந்தியா கூட்டணி கட்சியில் இன்று தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
இதன்படி, மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டி என்ற விவரங்களை இந்தியா கூட்டணி வெளியிடவில்லை.
இது குறித்து ஹேமந்த் சோரன் கூறுகையில், " இந்தியா கூட்டணி தலைவர்கள் தற்போது இங்கு இல்லை. அவர்கள் வந்த பிறகு இது குறித்து அறிவிப்போம்" என்றார். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன