< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகாரில் ரூ.42 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
|15 Nov 2024 1:19 PM IST
பீகாரில் ரூ.42 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா,
தாய்லாந்தில் இருந்து பூடான் வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருளை கடத்திய நபர் பீகாரில் இருப்பதாக கடத்தல் தடுப்பு முகமைக்கு ரகசிய தகவல் கிடைந்தது. இந்த தகவலின் அடிப்படையில், வடக்கு பீகாரில் உள்ள முசாபர்பூரில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அவர் வைத்திருந்த சூட்கேசில் இருந்து 4.2 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.42 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் டெல்லிக்கு சென்று கொண்டிருந்ததாகவும், அங்கு சில அடையாளம் தெரியாத நபர்களுக்கு இந்த போதைப்பொருளை வழங்கப்படவிருந்ததும் தெரியவந்துள்ளது.