< Back
தேசிய செய்திகள்
லோக் ஜனசக்தி தலைவராக சிராக் பஸ்வான் மீண்டும் தேர்வு
தேசிய செய்திகள்

லோக் ஜனசக்தி தலைவராக சிராக் பஸ்வான் மீண்டும் தேர்வு

தினத்தந்தி
|
26 Aug 2024 7:21 AM IST

ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்தோ அல்லது தனித்தோ தங்கள் கட்சி போட்டியிடும் என்று சிராக் பஸ்வான் கூறினார்.

ராஞ்சி,

லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது. அதில், அக்கட்சியின் தலைவராக மத்திய மந்திரி சிராக் பஸ்வான், ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த 5 ஆண்டுகள் அவர் அப்பதவியை வகிப்பார். மேலும், அரியானா, காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்தோ அல்லது தனித்தோ தங்கள் கட்சி போட்டியிடும் என்று சிராக் பஸ்வான் கூறினார்.

மேலும் செய்திகள்