< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஷ்கார்: குளத்தில் கார் கவிழ்ந்ததில் 8 பேர் பலி
|3 Nov 2024 1:51 PM IST
சத்தீஷ்காரில் குளத்திற்குள் கார் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தின் 3 பேர் உள்பட 8 பேர் பலியானார்கள்.
பல்ராம்பூர்,
சத்தீஷ்காரில் பல்ராம்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லாரிமா பகுதியில் இருந்து சுராஜ்பூர் மாவட்டத்திற்கு சொகுசு ரக கார் ஒன்றில் 8 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில், அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த அனைவரும் அச்சத்தில் சத்தம் போட்டனர்.
எனினும், இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தின் 3 பேர் உள்பட அனைவரும் தப்பிக்க வழியின்றி ஒருவர் பின் ஒருவராக பலியானார்கள். இவர்களில் 6 பேரின் உடல்கள் நேற்றிரவு மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டு உள்ளன. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.