< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் பலி
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் பலி

தினத்தந்தி
|
21 Aug 2024 6:38 PM IST

ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனகாபள்ளி,

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் இன்று சுமார் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மதிய உணவு நேரத்தின் போது மருந்து தொழிற்சாலையில் உள்ள ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனகாபள்ளி அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்