< Back
தேசிய செய்திகள்
மராட்டிய அரசு மீது வழக்கு: முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
தேசிய செய்திகள்

மராட்டிய அரசு மீது வழக்கு: முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

தினத்தந்தி
|
17 Nov 2024 5:41 AM IST

கர்நாடக எல்லையில் சில மாவட்டங்களில் சித்தராமையா நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மும்பை,

மராட்டிய மாநில சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்-மந்திரி சித்தராமையா மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சில மாவட்டங்களில் பிரசாரம் செய்ய நேற்று முன்தினம் சென்றார். அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சித்தராமையா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டதாக மராட்டிய மாநில பா.ஜனதா கூட்டணி அரசு சட்டசபை தேர்தலுக்காக பொய் விளம்பரம் செய்துள்ளது. இதற்காக மராட்டிய மாநில பா.ஜனதா அரசு மீது வழக்கு தொடரப்படும். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்