< Back
தேசிய செய்திகள்
லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
தேசிய செய்திகள்

லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

தினத்தந்தி
|
24 Nov 2024 2:37 AM IST

லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள சாலையில் நேற்று மாலை ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 11 பேர் பயணித்தனர்.

சுல்தான்பூர் கிராமம் அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்