< Back
தேசிய செய்திகள்
கூகுள் மேப்பால் ஆற்றில் கவிழ்ந்த சொகுசு கார்: 2 பேர் பலி
தேசிய செய்திகள்

கூகுள் மேப்பால் ஆற்றில் கவிழ்ந்த சொகுசு கார்: 2 பேர் பலி

தினத்தந்தி
|
24 Sept 2024 12:03 PM IST

உயிரிழந்த இருவரும் மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அருகே இருவர் கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். கூகுள் மேப்பை பார்த்தப்படி காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அருகே இருந்த ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், காரில் இருந்த இருவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரில் இருந்த உடல்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்