< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தில் ரூ.1.33 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

20 Jan 2025 2:45 PM IST
கடத்தலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இட்டாநகர்,
அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டத்தின் கலக்டாங் காவல் நிலையப் பகுதியில் உள்ள பெட்சில்லிங் கிராமத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், 1,654.22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் சுதான்சு தாமா தெரிவித்தார். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.33 கோடி எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.