< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
25 Jan 2025 1:29 PM IST

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டத்தின் ஹெய்ங்காங் பகுதியில் உள்ள அவாங் போட்ஷாங்பாம் மலைகளில் பாதுகாப்புப்படையினர் நேற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையின்போது பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட பொருட்களில் ஒரு துப்பாக்கி, பிஸ்டல், கார்பைன், மோட்டார் மற்றும் கையெறி குண்டுகள் அடங்கும் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்