< Back
தேசிய செய்திகள்
குறைந்தபட்ச ஆதரவு விலை: கோதுமை குவிண்டாலுக்கு ரூ.150 அதிகரிப்பு
தேசிய செய்திகள்

குறைந்தபட்ச ஆதரவு விலை: கோதுமை குவிண்டாலுக்கு ரூ.150 அதிகரிப்பு

தினத்தந்தி
|
16 Oct 2024 5:06 PM IST

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2025-26 மார்க்கெட்டிங் சீசனுக்கான ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடுகு மற்றும் கொண்டைக் கடலைக்கான எம்.எஸ்.பி. முறையே குவிண்டாலுக்கு ரூ.5,950 ஆகவும், ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடுகு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300, கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு 210 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 275 உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ.6,700-க்கு கொள்முதல் செய்யப்படும். பார்லி குவிண்டாலுக்கு ரூ.130 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.1,980 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குங்குமப்பூ குவிண்டாலுக்கு ரூ.140 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.5,940 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உறுதி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்