< Back
தேசிய செய்திகள்
48 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: அதிக இடங்களில் பாஜக வெற்றி முகம்
தேசிய செய்திகள்

48 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: அதிக இடங்களில் பாஜக வெற்றி முகம்

தினத்தந்தி
|
23 Nov 2024 3:50 PM IST

48 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பஞ்சாபில் 4 தொகுதியிலும் ஆம்ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 14 மாநிலங்களை சேர்ந்த 48 சட்ட சபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தரகாண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளில் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஒன்பது தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வெற்றி முகத்தில் உள்ளது. இரண்டு தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் இருக்கிறது.

பீகாரில் ஆளும் 4 சட்ட சபை தொகுதிகளில் தராரி மற்றும் பெலகஞ்ச் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடி இமாம்கஞ்ச் தொகுதியிலும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி ராம்கர் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

கர்நாடகாவில் இடைத்தேர்தல் மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. சண்டூர், ஷகான், சென்ன பட்னா ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் காங்கிரஸ் உள்ளது. இதில் சென்னபட்னாவில் மத்திய மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டார்.

அசாம் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த ஐந்து தொகுதிகளில் நான்கு தொகுகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. சப்பேவால், கிதர்பாவா மற்றும் தேரா பாபா நானாக் ஆகிய மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், பர்னாலாவில் காங்கிஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன.

கேரளாவின் பாலக்காட்டில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூததில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். ஏழு சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், ராகுல் 1,388 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். செலக்கராவில் ஆளும் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்