< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
3 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம்
|4 Nov 2024 2:56 PM IST
3 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 13-ம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தல் 20-ம் தேதிக்கு மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பல்வேறு கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் உள்ளதால், அவை வாக்கு சதவிகிதத்தை பாதிக்கலாம் என கருதி தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.