< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் வர்த்தகம் மும்முரம்
|30 Oct 2024 6:18 PM IST
தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் வர்த்தகம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லி,
இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை (31ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் வர்த்தகம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகள், இனிப்புகள், புதுத்துணிகள், நகைகள், பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் வர்த்தகம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.