< Back
தேசிய செய்திகள்
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி
தேசிய செய்திகள்

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

தினத்தந்தி
|
23 Sept 2024 2:25 PM IST

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் அமராவதி அருகே 50 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அங்கிருந்த 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையே, அப்பகுதி மக்கள் பஸ்சில் இருந்தவர்களை ஜன்னல் வழியாக பத்திரமாக வெளியே மீட்டனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்