< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்

தினத்தந்தி
|
14 Nov 2024 4:00 PM IST

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் கவிழ்ந்ததில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் தொழிலாளர்கள் குழுவை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்ததில் 25 பேர் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரேலி மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து பீகாரில் உள்ள ஒரு சூளைக்கு சுமார் 60 தொழிலாளர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் பலிபிட்டில் உள்ள பல்ராம்பூர் சவுகி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில், ருக்சானா மற்றும் ஜன்னதி பேகம் ஆகிய இரு பெண்களும் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பூரான்பூரில் உள்ள சமூக நல மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்