< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
|18 Nov 2024 1:14 AM IST
பஸ், திடீரென திருப்பப்பட்டதால் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று பக்தர்களை புனித யாத்திரை அழைத்து சென்றது. பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர். அவர்கள் யாத்திரையை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் பஸ் லால்சாட்- கோடா மேகா நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது, சாலையில் இருந்த பள்ளத்தை தவிர்ப்பதற்காக பஸ்சை திருப்பினார். வேகமாக வந்து கொண்டிருந்த பஸ், திடீரென திருப்பப்பட்டதால் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த அரவிந்த் சிங்(62), அந்திம்குமார் (28), பஸ் கண்டக்டர் மங்கிலால் ரத்தோர்(60) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 13 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.