< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் புல்லட் ரெயில் பால கட்டுமான பணியில் விபத்து; 3 பேர் பலி
தேசிய செய்திகள்

குஜராத்தில் புல்லட் ரெயில் பால கட்டுமான பணியில் விபத்து; 3 பேர் பலி

தினத்தந்தி
|
6 Nov 2024 4:57 AM IST

குஜராத்தில் புல்லட் ரெயில் வழித்தடத்திற்கான கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள்.

ஆனந்த்,

குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தில் வதோதரா நகரருகே வசாத் கிராமத்தில் மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்திற்கான கட்டுமான பணி நடந்து வந்தது.

இந்நிலையில், கட்டுமானம் நடைபெறும் மாஹி ஆற்றையொட்டிய பகுதியில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. ஸ்டீல் மற்றும் கான்கிரீட் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட அந்த கட்டுமான பகுதி திடீரென நேற்று இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி கொண்டனர்.

இதுபற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்களின் உதவியுடன் தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்தது. எனினும், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு நபர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

இதனால், தொழிலாளர்களில் மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா? என கண்டறிவதற்காக அந்த பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்