சந்திரசேகர ராவ் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ. காங்கிரசில் இணைந்தார்
|சந்திரசேகர ராவ் கட்சியில் இருந்து இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. சஞ்சய் குமார். இவர் நேற்று அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசில் இணைந்ததால் பி.ஆர்.எஸ். கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான ரேவந்த் ரெட்டி தலைமையில் குமார் காங்கிரசில் இணைந்தார். தொழில் ரீதியாக மருத்துவரான சஞ்சய் குமார், 2வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் காங்கிரசில் இணைந்த 5வது பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. ஆவார்.
முன்னதாக பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கடியம் ஸ்ரீஹரி, தனம் நாகேந்தர், டெல்லம் வெங்கட் ராவ் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எம்.எல்.ஏ.க்களை தவிர ஐதராபாத் மேயர் விஜய லட்சுமி ஆர். கட்வால் உள்பட பல பி.ஆர்.எஸ். தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர்.