< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு
|27 Nov 2024 2:17 PM IST
தெலுங்கானாவில் பள்ளியில் ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.
ஐதாராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுவன், பள்ளியில் மதிய உணவு சாப்பிடும்போது ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பூரிகளை ஒன்றாக சுருட்டி சாப்பிட்டுள்ளான்.
இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக பள்ளிக்கூட ஊழியர்கள் அந்த சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து பதற்றத்துடன் ஓடி வந்த சிறுவனின் பெற்றோர், தங்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.