பெங்களூரு; தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
|மின்னஞ்சல் மூலம் தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
பெங்களூரு ,
கர்நாடக மாநிலம் பெங்களூரு டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் உள்ள எச்எஸ்பிசி(HSBC) வங்கிக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து வங்கியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வங்கி ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.
இது குறித்து பெங்களூரு கிழக்கு பிரிவு டிசிபி கூறுகையில்;
சோதனையில் சந்தேகப்படும்படியாக எதுவும் கிடைக்கவில்லை, அது போலியான வெடிகுண்டு மிரட்டல். மேலும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி,கல்லூரிகள் மற்றும் விமானங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.