< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
|15 Nov 2024 1:46 AM IST
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மாம போன் வந்தது. அதில் பேசியவன் மும்பையில் இருந்து அஜர் பைஜானுக்கு முகமது என்ற பயணி வெடிகுண்டுகளுடன் பயணம் செய்வதாக மிரட்டல் விடுத்து விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டான்.
இதனால் உஷாரான பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. மர்ம நபரை பிடிக்க அவர் அழைத்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.