< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆக்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
|9 Dec 2024 2:53 PM IST
ஆக்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்நாட்டு விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் இந்திய விமானப்படை தளமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
விமான நிலையத்தின் கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் அலுவலகத்திற்கு மெயில் மூலம் மிரட்டல் வந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.