காதலனின் பயணத்தை தடுக்க காதலி செய்த விபரீத செயல்.. விமான நிலையத்தில் பரபரப்பு
|தனது காதலன் மும்பை செல்வதை தடுப்பதற்காக அவரது பையில் வெடிகுண்டு இருப்பதாக பெங்களூரு விமான நிலையத்திற்கு காதலி பொய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து, மும்பை செல்லும் எனது காதலர் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இதனால் விமான விமானம் பரபரப்பானது.
விமான நிலைய ஊழியர்கள் அந்த நபரை தேட ஆரம்பித்தனர். அந்த நபரைக் கண்டுபிடித்ததும். அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர், ஆனால் வெடிகுண்டு எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.இதை தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணும் அதே விமான நிலையத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெண்ணும் அவரது காதலரும் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு வெவ்வேறு விமானங்களில் புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் தனது காதலன் மும்பை செல்வதை அந்த பெண் விரும்பவில்லை. அதனால் தனது காதலனை பெங்களூருவில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் ஏறாமல் தடுக்கவே அப்பெண் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார் என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் ஜூன் 26 ஆம் தேதி நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.