< Back
தேசிய செய்திகள்
வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுப்பு?
தேசிய செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுப்பு?

தினத்தந்தி
|
3 Nov 2024 8:33 PM IST

வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை பகுதியில் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நிலச்சரிவில் 231 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனிடையே, நிலச்சரிவில் 47 பேர் மாயமாகினர்.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டின் மலைப்பகுதியில் உள்ள பரப்பனபரா கிராமம் அருகே மரக்கிளையில் மனித உடல்பாகம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல்பாகத்தை மீட்ட வனத்துறையினர் டிஎன்ஏ பரிசோதனைக்கு அட்டமலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டிஎன்ஏ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல்பாகமா? என்பது தெரியவரும்

மேலும் செய்திகள்