< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் தியேட்டர் அருகே குண்டுவெடி; ஒருவர் காயம்
|28 Nov 2024 1:16 PM IST
வெடி விபத்து ஏற்பட்ட பகுதிக்கு 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியின் பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள பி.வி.ஆர். தியேட்டர் அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்ததாகவும், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தீயணைப்புத்துறையினர் அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் மற்றும் சேதம் விவரம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரசாந்த் விஹார் பகுதியில் இன்று காலை 11.48 மணிக்கு வெடி விபத்து நடந்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது. அழைப்பை தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்" என்றார்.